ADDED : ஜூன் 01, 2010 07:11 PM
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில், பிரஜாபிதாபிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், இலவச ஆரோக்கிய கண்காட்சி, விழிப்புணர்வு முகாமை கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், "புகையிலை போதை மருந்துக்கு மனிதன் அடிமையாகி, உடல் ஆரோக்கியத்தை இழந்து, பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். அரசு ஊழியர்களின் அலுவலகப் பிரச்னை, மன உளைச்சல்களை போக்க தியானம் மற்றும் யோகா போன்றவற்றை கற்று நல்வழியில் மனதை செலுத்த வேண்டும். விரைவில் அரசு ஊழியர்களுக்கு மனநலம், தியானம், யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஞானசேகரன், பி.ஆர்.ஓ. சரவணன், தாசில்தார் சுரேஷ், துணை தாசில்தார்கள் சிவக்குமார், சதாசிவம் பங்கேற்றனர்.